திமுக தேர்தல் அறிக்கையும் முகமூடியும்
நடக்கவிருக்கின்ற 2019 பாராளுமன்ற தேர்தலில் திராவிட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கின்றன. அவற்றின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவற்றினை மதிப்பாய்வு செய்து பார்ப்போம்.
திராவிட முன்னேற்ற கழகம் :
சிறப்பம்சங்கள் :
1. தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழிலேயே செயல்படத்தக்க வகையில் இணை ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிக்கத் தேவையான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
திராவிட முன்னேற்ற கழகம் கடந்த காலங்களில் ஐந்து முறை ஆட்சியில் இருந்துள்ளது. முதலமைச்சராக தமிழின காவலன் என்று கூறிக்கொண்ட திரு.கருணாநிதி அவர்கள் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை இணை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம்.. ஆனால்?!?!
2. தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.86,689லிருந்து ரூ.1,50,000 ஆக உயர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் இந்த நாட்களில் தனிநபருக்கு வருமானமே இல்லாத நிலையில் எப்படி தனிநபர் வருமானத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்?!? அப்படி என்ன செயல்திட்டம் உங்களிடம் உள்ளது?!
3. தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஐந்து முறை முதலமைச்சராக ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது நதிகள் கண்களுக்கு தெரியவில்லையா?! நேற்றுதான் தென்னிந்திய நதிகள் பிறந்ததா?!?!
4. 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வலியுறுத்தப்படும்.
27 ஆண்டுகளாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் வைத்து அரசியல் செய்தாகி விட்டது. இனியும் ஓட்டுக்காக இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாசகங்கள் வரும் காலங்களில் தேர்தல் அறிக்கையில் நிச்சயம் இடம்பெறும்.
இது போன்ற வெற்று வாக்குறுதிகளும் வார்த்தை ஜாலங்களும் அவ்வப்போது நடக்கும் தேர்தல்களில் நாம் பார்த்தவைதான். இவர்கள் மாறப்போவது இல்லை. மாற வேண்டியது இவற்றை நம்பி இவர்களுக்கு வாக்களிக்கப் போகும் வாக்காளர்கள் தான்..
Comments
Post a Comment