வா வா பெண்ணே - உறியடி 2 ( Va Va Penne - Uriyadi 2 )

பாடல் : வா வா பெண்ணே
படம் : உறியடி 2
பாடகர்கள் : சித் ஸ்ரீராம் & பிரியங்கா
பாடலாசிரியர் : விஜயகுமார் & நாகராஜி
நடிகர்கள் : விஜயகுமார், சுதாகர் & விஸ்மயா
இசை : கோவிந்த் வசந்தா
இயக்கம் : விஜயகுமார்


          வா வா பெண்ணே வழக்கமான ஒரு காதல் பாடல்.. இருவருக்கும் இடையேயான காதலை ஸ்பரிசமாக விவரிக்கும் பாடலாக உள்ளது.. சித் ஸ்ரீராமுக்கு உள்ள ஒரு தனித்தன்மை இப்பாடலின் பலம்.. மற்றோன்று கோவிந்த் வசந்தாவின் உயிர்ப்பூட்டும் இசை.. 96 திரைப்பட ஆல்பத்திருக்கு பிறகு இப்பாடல் கண்டிப்பாக இசைப்பிரியர்களுக்கு ஒரு தனி விருந்து தான்.. பாடல் வரிகளும் அழகானது.. காதல் ததும்ப ததும்ப அதன் வரிகள் உங்களுக்காக...


" வா வா பெண்ணே
என் பாடலின் இசையே நீ வா வா 

புது ராகம் செய்வோம்… "

" வா வா கண்ணே
என் தேடலின் திசையே நீ வா வா 
புது பயணம் செல்வோம்…. "

என் இசை நீயே
உன் கவிதை நானே
முடிவில்லா முதற்காதல்
செய்வோம் வருவாய் நீயே….

வா வா பெண்ணே
என் பாடலின் இசையே நீ வா வா புது ராகம் செய்வோம்…

வா வா கண்ணே
என் தேடலின் திசையே நீ வா வா புது பயணம் செல்வோம்….

நாணம் மாறும் மனமோ தடுமாறும்
மௌனம் தீரும் இன்பம் சேரும்
மீண்டும் மீண்டும்
பார்த்திடவே தோன்றும்
தோன்றும் வார்த்தை தொலைந்தே போகும்

நேற்றிரவு நான்
விழித்திருந்தேன்
காரணம் நீ கண்ணே காரணம் நீ

அதிகாலையில்
நான் விழித்து கொண்டேன்
காரணம் நீ அன்பே காரணம் நீ

நிழலாய் நானே உடன் வருவேனே
தனிமை தொலையும்
புது இனிமை இனி உருவாகும்

புவியிசை தோற்கும்
ஆசை பிறக்கும் நம்மிசை சேர்க்கும்
என் திசைகளும் அதை ஏற்கும்

காணும் யாவும்பு திதாய் தெரியும்
வானில் பறக்க சிறகுகள் விரியும்

ஏனோ ஏனோ மனத்திரை மறையும்
இதுவே காதல் என்றே புரியும்

வா வா பெண்ணே
என் பாடலின் இசையே நீ வா வா புது ராகம் செய்வோம்…

வா வா கண்ணே
என் தேடலின் திசையே நீ வா வா புது பயணம் செல்வோம்….

வா வா அன்பே

வழித்துணை நானே
நீயும் நானும் ஓர் உயிர் தானே

வா வா அன்பே
உன் துணை நானே
நீ என் வாழ்வின் புது வரம்தானே






Comments

Popular posts from this blog

தண்ணீரின் அவசியமும் அவசரமும்

நான் வியந்த சாமானியன்