Posts

சிறுகதைகள்

உலக சிட்டுக்குருவி தினம் - World Sparrow Day

It is not ok if a bird watched as I watched in childhood. In the morning of our drive home, it is up to me to keep me up with a little kick keech while sleeping. Our home is also home to them. In time, it is rarely to see a sparrow. This world is not just for humans like us, but all living things have the right to live in the world. But we are destroying animals and animals for the sake of man's self-sufficiency. Here is a list of celibolar Salim Ali. Salim Ali, who played a sparrow with a sparrow, became a birdman of India devoted to his life. Once in China, crocodiles destroyed in crocodiles were one reason for decades, as Mao ordered to destroy it, the locust of the locusts and the decline in the number of crocodile Chinese, killing each other and killing each other. Director Shankar has made Rajini and Akshay Kumar in the budget of Rs.400 crore in the budget, and cell phone signals are destroyed by 2.0. Today the whole world is celebrated on the day of t...

திமுக தேர்தல் அறிக்கையும் முகமூடியும்

நடக்கவிருக்கின்ற 2019 பாராளுமன்ற தேர்தலில் திராவிட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கின்றன. அவற்றின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவற்றினை மதிப்பாய்வு செய்து பார்ப்போம். திராவிட முன்னேற்ற கழகம் : சிறப்பம்சங்கள் :  1. தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழிலேயே செயல்படத்தக்க வகையில் இணை ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிக்கத் தேவையான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். திராவிட முன்னேற்ற கழகம் கடந்த காலங்களில் ஐந்து முறை ஆட்சியில் இருந்துள்ளது. முதலமைச்சராக தமிழின காவலன் என்று கூறிக்கொண்ட திரு.கருணாநிதி அவர்கள் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை இணை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம்.. ஆனால்?!?! 2. தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.86,689லிருந்து ரூ.1,50,000 ஆக உயர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் இந்த நாட்களில் தனிநபருக்கு வருமானமே இல்லாத நிலையில் எப்படி தனிநபர் வருமானத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்?!? அப்படி என்ன செயல்திட்டம் உங்களிடம் உள்ளது?! 3. தென்னிந்திய நதிகளை ...

தண்ணீரின் அவசியமும் அவசரமும்

          நிலத்தை சல்லடைக் கண்களாக துளைத்து நிலத்தடி நீர் முழுவதையும் வெளியேற்றி விட்டோம். மண்ணில் ஈரப்பசை முற்றாக உலர்ந்து போனதால் பருவ மழைகளும் பாதை மாறிவிடுகின்றன. பங்குனி மாதம் தொடங்கியுள்ள வெயில் 41℃/43℃ என நீடிப்பதாய் உள்ளது. மழை வந்தாலும் இந்நிலை அடங்கப்போவதில்லை.      வான் பொய்ப்பினும் தான் பொய்க்காத காவிரி பல காலம் வறண்டே கிடந்தது. ஆற்று ஊற்று நீரும் காணாமல் போகிறது. இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வந்தது இயற்கையின் தயவே தவிர, கர்நாடகாவின் கரிசனம் நிச்சயம் இல்லவே இல்லை.              அடுத்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வருமோ வராதோ என்று எவராலும் கணிக்க முடியாது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் ஆறுகள் பலவும் கடலைத் தொடுவதே இல்லை. அவற்றின் முழு ஜீவனும் அடங்கி விட்டது.                 மலைகளிலேயே 1000/1500 அடி குழாய்கள் அமைத்து நெல், கரும்பு, வாழை என பயிரிட்டால் நிலப்புற ஆறுகளில் நீரோட்டம் உண்டாவது இல்லை. தொன்றுதொட்டு உள்ள ஆயக்கட்டு நிலங்கள் தரிசாகலாமா? எங்கே முரண...

நான் வியந்த சாமானியன்

நான் இன்று விவசாயத்தை மனதளவில் நேசிக்க காரணம் அவர்தாம். கிழவனான பின்பு கிராமத்தில் தனிமையான ஒரு வயல் நடுவே உச்சிவெயில் நடுவீட்டில் படும்படி திண்ணை வைத்த ஒரு வீட்டை கட்டி குடியேற வேண்டுமென்ற ஆசை துளிர்த்ததற்கும் காரணம் அவர்தாம். தொன்னூறு வயதையொற்ற சாதாரண உயரத்தில் நரைமுடி, தாடி தலையில் வெள்ளை துண்டு, வெள்ளை வேட்டி சட்டை. இவை போதும் அவரின் அறிமுகத்திற்கு. முடிந்தவரை தமிழில் மட்டும் பேசக்கூடிய மனிதர். ஆனால் அவரின் ஆங்கிலப்புலமை அதற்கு சற்றும் குறைவில்லை. அத்தி பூத்தாற்போல அல்லாமல் அடிக்கடி அவரை காண்பதுண்டு. விவசாயி. யாரும் அவ்வளவாய் அறிந்திராத ஒரு விவசாய அமைப்பின் தலைவரும் அவரே. மாதத்திற்கு நான்கு அல்லது ஐந்து முறையேனும்  பிரதமர், முதல்வர், மாவட்ட ஆட்சியர் இப்படி யாரேனும் அவரிடமிருந்து கடிதம் பெறும் பாக்கியம் பெறுவர். ஆனால் அவர்கள் அதை படித்தார்களா என்று கேட்டால் கேள்விக்குறி தான் பதிலாக கிடைக்கும். இதுவரை ஒரு பதிலும் வந்தது இல்லை. ஆனால் அனுப்பிய இருபது பத்திரிக்கைகளில் ஏதேனும் ஒன்றில் ஒரு சிறு துணுக்காகவோ கட்டுரையாகவோ இடம்பெறும்.           இந்த...

பெண்ணியலும் பெண் சார்ந்த இடமும்

Image
                   மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்றார் கவிமணி .  பெண் என்பவள் அழகே உருவானவள் . அவள் கவிதையானவள் . தனித்துவமிக்கவள் .  ஆனால் , பெண்ணாக ஏன்தான் பிறந்தோமோ என்றே அஞ்சும் நிலையே பெண்களுக்கு மிஞ்சியுள்ளது . என்னுடைய பாட்டி காலத்திலெல்லாம் பெண்குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் கொடுத்து சிசுக்கொலை செய்த நிகழ்வுகள் சட்டத்தின் மூலம் குறைந்தன . ஆனால் சமீபகாலமாக பெண்ணுக்கு சக மனிதனான ஒரு ஆண் மூலம் நடந்தேறும் கொடூரங்கள் நெஞ்சை கிழித்தெறிகின்றன . இவை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளன . இளம்பெண்கள் மட்டுமல்லாமல் பள்ளி குழந்தைகள் மற்றும் யாவுமறியா பிஞ்சுக்குழந்தைகளுக்கு கூட வக்கிரங்கள் இழைக்கப்படுகின்றன . ஒரு பெண்ணை தன்னுடைய தமக்கையாய் தங்கையாய் குழந்தையாய் ஏதேனும் ஒரு உறவோடு கொண்டாடாமல் இருக்கும் இச்சமூகம் நாசமாய் போக வேண்டும் .  இந்த நொடியில் நடிகர் சூர்யா எழுதிய கட்டுரை முக்கியமானது .      ...